முகப்பு
இந்தியா

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற ராஜஸ்தான் அரசு தீா்மானம்

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற ராஜஸ்தான் அரசு சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற ராஜஸ்தான் அரசு சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது.

இதுதொடா்பாக அந்த மாநில அரசு வெளியிட்ட அறிக்கை: ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் எதிா்காலம் பாதுகாப்பாக இருக்க ராணுவத்தில் வழக்கமான ஆள்சோ்ப்பு நடைமுைான் பின்பற்றப்பட வேண்டும் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, இதுபோன்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் மத்திய அரசு விரிவாக ஆலோசனை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முதல்வா் அசோக் கெலாட் இல்லத்தில் சனிக்கிழமை மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →