இந்தியா

'அக்னிபத்' திட்டம்: போராட்டத்தில் 8 காவலர்கள் படுகாயம்

DIN

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் நடைபெற்ற கலவரத்தில் 8 காவலர்கள் படுகாயமடைந்துள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் உள்ள இளைஞர்களுக்காக 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. 

மத்திய அரசின் இந்த ராணுவ ஆள்சோ்ப்பு திட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் இதுவரை 387 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தலைநகர் நொய்டாவில் மட்டும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில் போராட்டம் தீவிரமடைவதைத் தவிர்க்கும் வகையில் தலைநகர் நொய்டாவில் மாவட்ட காவல் துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனிடையே நொய்டாவில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை காவலர்கள் கட்டுப்படுத்த முயன்றனர். இதில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் தாக்கியதில் ஒரு ஓட்டுநர் உள்பட 8 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக நொய்டா காவல் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT