இந்தியா

பிரதமர் மோடியை வரவேற்று இந்தியில் பேனர்கள்: கருப்பு மை பூசி கன்னட அமைப்பினர் எதிர்ப்பு

DIN

பிரதமர் மோடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த இந்தி பேனர்களுக்கு கன்னட அமைப்பினர் கருப்பு மை பூசி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமா் மோடி இருநாள் பயணமாக பெங்களூருக்கு திங்கள்கிழமை வருகிறாா். அப்போது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடக்கியும் வைக்கிறாா். அதன்பிறகு, அங்கிருந்து புறப்பட்டு கேரளம் செல்கிறாா். பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக ஆர்.ஆர்.நகர், விஜயநகர், மைசூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்தி வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 

இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மைசூர் சாலை, ஆர்.ஆர்.நகரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களுக்கு கர்நாடக ரக்‌ஷனா வேதிகே அமைப்பினர் கருப்பு மை பூசியதோடு பேனர்களை அங்கிருந்து அகற்றவும் நேற்று முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

இச் சம்பவத்தை தொடர்ந்து மைசூரு சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக ரக்‌ஷனா வேதிகேவின் தலைவர் பிரவீன் ஷெட்டி கூறியதாவது, “கர்நாடக அரசின் இந்த அணுகுமுறையை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். நகரத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஹிந்தி பேனர்களை மட்டும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT