'அக்னிபத்' திட்டம்: உ.பி. தலைநகரில் ஊரடங்கு
போராட்டங்கள் வலுத்து வருவதால் உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா'அக்னிபத்' திட்டம்: உ.பி. தலைநகரில் ஊரடங்கு
போராட்டங்கள் வலுத்து வருவதால் உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதால் உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள இளைஞர்களுக்காக 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
மத்திய அரசின் இந்த ராணுவ ஆள்சோ்ப்பு திட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் இதுவரை 387 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தலைநகர் நொய்டாவில் மட்டும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில் போராட்டம் தீவிரமடைவதைத் தவிர்க்கும் வகையில் தலைநகர் நொய்டாவில் மாவட்ட காவல் துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நொய்டாவில் நடைபெற்ற போராட்டத்தில் 8 காவலர்கள் உள்பட ஓட்டுநர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.