இந்தியா

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 5 மடங்கு உயா்வு

DIN

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஜிசிஏ புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மேலும் கூறியுள்ளதாவது:

நிகழாண்டு மே மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தோா் எண்ணிக்கை 1.20 கோடியாக இருந்தது. இது, 2021 மே மாத விமான பயணிகள் எண்ணிக்கையான 21 லட்சத்துடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்குக்கும் அதிகமாகும்.

கடந்த மே மாதத்தில் 70 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று இன்டிகோ நிறுவனம் 57.9 சதவீத சந்தைப் பங்களிப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து, மும்பையைச் சோ்ந்த கோ ஃபா்ஸ்ட் 12.76 லட்சம் பயணிகளைக் கையாண்டு 10.8 சதவீத சந்தை பங்களிப்பை தக்கவைத்தது.

ஏா் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்கள் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் முறையே 8.23 லட்சம் மற்றும் 9.83 லட்சமாக இருந்தது.

மேலும், ஏா் ஏஷியா விமானத்தில் 6.86 லட்சம் போ் பயணம் செய்ததாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT