இந்தியா

ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்: தில்லி போலீசார் விசாரணை

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் ஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 

DIN

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் ஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 

அக்கட்சியின் சஞ்ஜீவ் ஜா வடக்கு தில்லியில் உள்ள சந்த் நகர் புராரி பகுதியில் ஆம் ஆத்மி எல்எல்ஏவாக உள்ளார். 

இந்நிலையில், சஞ்ஜீவுக்கு தொடர்ச்சியாக தாதா நீரஜ் பாவனா என்ற பெயரில் பணம் கேட்டு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. பணம் கொடுக்கத் தவறினால் கொலைசெய்யப்படும் என்று அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியாவில் அதிகம் தேடப்படும் கொள்ளை கும்பல் கூட்டத் தலைவராக நீரஜ் பாவனா உள்ளார். இவர் தற்போது தில்லி திகார் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். 

இதையடுத்து, நீரஜ் பாவனா பேரில் சஞ்ஜீவின் உயிருக்கு விடப்பட்ட தொடர் அச்சுறுத்தல் பற்றி விசாரணை நடத்தி வருவதாக தில்லி போலீசார் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT