காற்று மாசு ஏற்படுவதை தடுக்க 4 மாதங்கள் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.
தில்லி கடந்த குளிர் காலத்தின் போது கடுமையான காற்று மாசு ஏற்பட்டதன் விளைவாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மாதக் கணக்கில் மூடப்பட்டது.
இதையும் படிக்க | அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் வர வாய்ப்பு: தமிழ்மகன் உசேன்
இந்நிலையில், நிகழ்வாண்டு குளிர் காலத்தின்போது ஏற்படும் காற்று மாசு சூழலை முன்கூட்டியே தடுக்கும் 4 மாதங்களுக்கு நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் தில்லிக்குள் நுழைய தடை விதித்துள்ளனர்.
அதன்படி, நிகழ்வாண்டு அக்டோபர் 1 முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28 வரை நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.