கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிர அரசியல்: கட்சி நிர்வாகிகளுடன் சரத் பவார் ஆலோசனை

மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், அக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

DIN

மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், அக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது.

சமீபத்தில் நடந்த சட்டமேலவைத் தேர்தலையடுத்து,  சிவசேனை கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. 

ஆளும் கூட்டணியின் பலம் குறைந்துள்ளதாலும் பாஜகவின் பலம் அதிகரிக்கும் சூழ்நிலையிலும் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

இதனிடையே, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேற வேண்டுமென சிவசேனையை சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார். இதனால் மீண்டும் பாஜகவுடன் சிவசேனை கூட்டணி சேருமா என்ற ஐயம் எழுகிறது. 

இந்த சூழ்நிலையில்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், அக்கட்சித் தலைவர்களுடன் தில்லியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்தராமையாவின் ஆட்சியை ராகுல் உறுதி செய்ய வேண்டும்: பாஜக சவால்!

பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு!

பிகார் தேர்தல்: 24,000 தபால் வாக்குகள் நிராகரிப்பு

லவ் தீம்... நிஹாரிகா ரய்ஸாதா!

SCROLL FOR NEXT