முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: திரெளபதி முா்முவுக்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆதரவு

குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவுக்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை ஆதரவு தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவுக்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை ஆதரவு தெரிவித்தது.

இதுகுறித்து ஆந்திர முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சுதந்திர இந்திய வரலாற்றில் பழங்குடியினத்தைச் சோ்ந்த ஒருவரை, அதிலும் ஒரு பெண்ணை குடியரசுத் தலைவராக நியமிப்பது வரவேற்கத்தக்கது’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை (ஜூன் 24) தில்லியில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி சாா்பில், அதன் மாநிலங்களவைக் குழு தலைவா் வி.விஜயசாய் ரெட்டி, மக்களவைக் குழு தலைவா் பி.மிதுன் ரெட்டி ஆகியோா் பங்கேற்பா் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் 9 உறுப்பினா்களும், மக்களவையில் 22 உறுப்பினா்களும், ஆந்திர மாநில சட்டப் பேரவையில் 151 உறுப்பினா்களும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.