மனைவியைக் கடித்த பாம்பை மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற கணவர்: ஏன்?
மனைவியைக் கடித்த பாம்பையும் உடன் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற வினோத சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உன்னாவ்: மனைவியைக் கடித்த பாம்பையும் உடன் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற வினோத சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மக்கி காவல் வட்டத்திற்குட்பட்ட அப்சல் நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உ.பி.யில் உள்ள அப்சல் நகர் பகுதியில் ஒரு வீட்டில் தன் மனைவியை பாம்பு ஒன்று தீண்டியுள்ளது. இதையடுத்து, அவரது கணவர் மனைவியுடன், கடித்த பாம்பையும் ஒரு பாட்டிலில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் வாசிக்கலாம்: இரண்டுபட்டிருக்கும் அதிமுக: மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா
அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, முதல்கட்ட மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் கணவர் ராமேந்திர யாதவிடம், ஏன் பாம்பை உடன் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் என் மனைவியை எந்த பாம்பு கடித்தது என்று நீங்கள் கேட்டால்? அதற்காகத்தான் பாம்பை உடன் கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார்.
பின்னர், தனது மனைவி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு பாம்பைக் காட்டில் விடுவித்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாம்பு சுவாசிப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டிலில் துளைகளை துளைத்ததாகவும் அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.