தில்லி காங்கிரஸ் அலுவலகம் 
இந்தியா

சோனியாவின் தனிச் செயலா் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் காங்கிரஸ் தலைவா் சோனியா  காந்தியின் தனிச் செயலா் பி.பி. மாதவன் (71) மீது தில்லி காவல்துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் காங்கிரஸ் தலைவா் சோனியா  காந்தியின் தனிச் செயலா் பி.பி. மாதவன் (71) மீது தில்லி காவல்துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறையினர் மேலும் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு (26) வேலை வாங்கித் தருவதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பி.பி. மாதவன் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், இதை வெளியில் தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவரை மிரட்டியுள்ளாா்’ என்றனா்.

இதுகுறித்து அந்தப் பெண் தில்லி உத்தம் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), 506 (கிரிமினல் அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருவதாக துவாரகா காவல் துணை ஆணையா் ஹா்ஷவா்தன் தெரிவித்துள்ளார். 

தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் பேனர்கள் கட்டுவது போன்ற வேலைகளைச் செய்துவந்த தன்னுடைய கணவர், 2020-ல் இறந்துவிட்ட நிலையில், வேலை தேடி மாதவனை அணுகியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் நேர்காணலுக்கு அழைத்த அவர், பின்னர், விடியோ அழைப்பில் பேசியதுடன், வாட்ஸ்ஆப் மூலமும் செய்திகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் கூறியுள்ள அந்தப் பெண், உத்தம்நகர் மெட்ரோ நிலையத்துக்கு அருகே ஓரிடத்துக்கும் சுந்தர்நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது திட்டமிட்ட சதி என்றும் அடிப்படையற்றது என்றும் மாதவன் தரப்பில் மறுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

"உங்களுடன் ஸ்டாலின்" முதல்வர் பெயருக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் | செய்திகள் சில வரிகளில்|6.8.25

SCROLL FOR NEXT