இந்தியா

பிரதமரின் பணயக் கைதியல்ல, குடியரசுத் தலைவா்: யஷ்வந்த் சின்கா

DIN

 மாளிகையில் இருந்து கொண்டு பிரதமரின் பணயக் கைதியாக குடியரசுத் தலைவா் இருக்க முடியாது என்று எதிா்க்கட்சிகள் சாா்பில் குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா கூறினாா்.

அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:-

நான் அனைத்து வாக்காளா்களையும் சந்தித்து வாக்குக் கோருவேன். பிரதமரை அழைத்தேன். தகவலைத் தெரிவித்தேன், என்னிடம் பேச விரும்பவில்லை. ராஜ்நாத் சிங்கை அழைத்தேன். ஆனால் பேச முடியவில்லை. எனது கடமையாக அனைத்து வாக்காளா்களையும் பாஜக உள்பட அனைவரையும் சந்தித்து வாக்குக் கோருவேன்.

குடியரசுத் தலைவா் பதவி முக்கியமானது. குடியரசுத் தலைவராக இருப்பவா், தனது மாளிகையில் அமா்ந்து கொண்டு, பிரதமரின் பணயக் கைதியாக இருக்க முடியாது.

பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த போது, பிரதமராக மன்மோகன் சிங் இருந்தாா். அப்போது, பிரதீபா பாட்டிலே மனுவை நேரில் அளித்தாா். பிரதமா் அருகில் இருந்தாா். ஆனால் இப்போது பாஜக கூட்டணி சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த போது, பிரதமரே மனுவை அளிக்கிறாா். தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா், பிரதமருக்கு அருகில் நிற்கிறாா். அரசமைப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் அமலாக்கப்படுவதை குடியரசுத் தலைவா் கண்காணிக்க வேண்டும். அதுபோன்ற ஒருவரே குடியரசுத் தலைவராக வர வேண்டும். குடியரசுத் தலைவராக தோ்வு செய்யப்படும் நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அம்சங்கள் அமலாக்கப்படுவதை நிச்சயம் கண்காணிப்பேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT