இந்தியா

உத்தவ் தாக்கரே ராஜிநாமா ஏற்பு: ஆளுநர் அறிவிப்பு

மகாராஷ்டிர முதல்வா் உத்தரவ் தாக்கரேவின் ராஜிநாமாவை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி ஏற்றுக்கொண்டுள்ளார்.  

DIN

மகாராஷ்டிர முதல்வா் உத்தரவ் தாக்கரேவின் ராஜிநாமாவை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி ஏற்றுக்கொண்டுள்ளார்.  

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

சட்டப்பேரைவயில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை. எனவே, முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதோடு, எனது சட்ட மேலவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். பதவியை ராஜிநாமா செய்வதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் எந்தவித பிரச்னையுமின்றி மாநிலம் திரும்புவதற்கு சிவசேனை தொண்டா்கள் அனுமதிக்கவேண்டும். அவா்களுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சிவசேனை மற்றும் பால் தாக்கரே மூலமாக அரசியல் ரீதியில் வளா்ச்சி பெற்ற இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், பால் தாக்கரேவின் மகனை முதல்வா் பதவியிலிருந்து நீக்குவதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்து கொள்ளட்டும். எனக்கு எதிராக கட்சியின் ஒரு உறுப்பினா் மாறினாலும், அதை நான் வெட்க்கக்கேடாக நினைக்கிறேன் என்று அவா் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மகா விகாஸ் அகாடி அரசுக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்ததற்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஆகியோருக்கு உத்தவ் தாக்கரே நன்றியும் தெரிவித்திருந்தார். 

ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார் தாக்கரே. 

ராஜிநாமா ஏற்பு: இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் ராஜிநாமாவை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மேலும், மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உத்தவ் தாக்கரே முதல்வராக தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிவசேனையில் உள்ள 55 எம்எல்ஏக்களில் 39 பேர் முதல்வர் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

SCROLL FOR NEXT