இந்திய மாணவர் பலி: பிரதமர் மோடி அவசர ஆலோசனை
உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் பலியானதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் பலியானதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.
ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மீதும் ரஷியப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றனர்.
இதையும் படிக்க | உக்ரைன் போர்: ரஷியத் தாக்குதலில் இந்திய மாணவர் பலி
கார்கிவ்வில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த நவீன் என்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள், வெளியுறவுத் துறை அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்து வருகிறார்.