இந்தியா

மகா சிவராத்திரி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

DIN

மகா சிவராத்திரியையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடவுள் சிவனுக்கு ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி இருந்தாலும் கோடை காலம் தொடக்கத்தில் பிப்ரவரி/மார்ச் மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் விசேஷசமானது. ஓர் ஆண்டில் அனுசரிக்கப்படும் 12 சிவராத்திரிகளில், மகா சிவராத்திரி மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. 

இன்று(மார்ச் 1) மகா சிவராத்திரியையொட்டி அனைத்து சிவன் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், 'உங்கள் அனைவருக்கும் மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள். தெய்வங்களின் கடவுளான மஹாதேவ் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். ஓம் நமசிவாய' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT