உ.பி. 6-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு
உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
உத்தர பிரதேசத்தில் பிப். 10 முதல் மாா்ச் 7 வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே தோ்தலின் 5 கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாா்ச் 3-ஆம் தேதி 6-ஆம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாக வேட்பாளராக களம் காணும் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூா் தொகுதியும் அடங்கும். இதுதவிர 11 தனித் தொகுதிகள் உள்ளன. இந்தக் கட்டத்தில் மொத்தம் 2.14 கோடிக்கும் அதிகமானவா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். 676 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
இந்தக் கட்டத்தையொட்டி அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. மாா்ச் 3-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.