இந்தியா

தெலங்கானாவில் சாலை விபத்து: 6 பேர் பலி, 10 பேர் காயம்

DIN

தெலங்கானாவில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஏற்பட்ட நான்கு வெவ்வேறு வித்துகளில் 6 பேர் பலியாகினர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

விபத்து தொடர்பாக காவல்துறை கூறியது, 

அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும், கவனக்குறைவே விபத்துக்கான காரணங்கள் என்று தெரிவித்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை இரவு ஹைதராபாத் புறநகரில் உள்ள மேட்சலில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.

மேட்சலில் இருந்து சுசித்ரா சாலை நோக்கிச் சென்ற கார் மேட்சல் செக்போஸ்ட் அருகே சாலை மீடியனில் மோதியது. இந்த காரில் 9 பேர் கொண்ட குழு பயணித்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 7 பேர் சிகிச்சைக்காக காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சூர்யாபேட்டை மாவட்டத்தில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு 2 இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதியதில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் காயமடைந்தார். ஹைதராபாத்தில் இருந்து அண்டை மாநிலமான ஆந்திராவின் காக்கிநாடாவுக்குச் சென்று கொண்டிருந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார், அவருடன் சென்றவர் காயமடைந்தார்.

இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதும்,  பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என காவல்துறை தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT