இந்தியா

நாட்டில் புதிதாக 7,554 பேருக்குத் தொற்று: ஒரே நாளில் 14,123 பேர் மீண்டனர்

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,554 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 14,123 பேர் மீண்டனர். 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 7,554 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 223 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,14,246-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது. 

நேற்று ஒரேநாளில் 14,123 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் விகிதம் 98.60 சதவிகிதமாக உள்ளது. தற்போது 85,680 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாடு முழுவதும் இதுவரை 1,77,79,92,977 (177 கோடி) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,55,862 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.20 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.20 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 76,91,67,052 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,84,059 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT