இந்தியா

புதினுடன் பிரதமர் மோடி பேச்சு

DIN


ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று (புதன்கிழமை) பேசினார்.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6-வது நாளாக தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் ரஷிய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு இந்திய மாணவர் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

ஏராளமான இந்திய மாணவர்கள் இன்னும் உக்ரைனிலிருந்து எல்லைகளை வந்தடைய திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார். இருவரும் உக்ரைனில் நிலவும் சூழல் குறித்தும், குறிப்பாக கார்கீவ் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் நிலை குறித்தும் ஆய்வு நடத்தினர். போர்ப் பகுதிகளில் இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT