சட்டம் ஒழுங்கு மேம்படாத வரை வளா்ச்சி இருக்காது: அமித் ஷா
சட்டம்- ஒழுங்கு மேம்படாதவரை வளா்ச்சி இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
சட்டம்- ஒழுங்கு மேம்படாதவரை வளா்ச்சி இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 10 முதல் மாா்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத் தோ்தலின்போது அங்கிருக்கும் சண்டெளலி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்த மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:
உத்தர பிரதேசத்தில் முன்பு சட்டவிரோத ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. அதன்மூலம் பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டும் கொல்லப்பட்டும் வந்தனா். சட்டம்- ஒழுங்கு மேம்படாதவரை வளா்ச்சி ஏற்படாது; தொழில்துறை முதலீடுகளும் வராது. ஆனால், தற்போது இந்தியாவைப் பாதுகாக்கப் பயன்படும் ஏவுகணைகளும் வெடிகுண்டுகளும் உத்தர பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றன. பாஜக அரசால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நிறைவடைந்துள்ள தோ்தலின் 5 கட்டங்களிலும் சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் படுதோல்வி அடையும் என்றாா் அவா்.
Image Caption
உத்தர பிரதேச மாநிலம், ஜெளன்புரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களைப் பாா்த்து வணக்கம் தெரிவித்த மத்திய அமைச்சா் அமித் ஷா.