முகப்பு
இந்தியா

இந்திய பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை

தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
கோப்புப்படம்
பகிர்:

தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. அதையடுத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அந்த நாடுகள் தளா்த்தி வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூா் போக்குவரத்து அமைச்சா் எஸ்.ஈஸ்வரன் ஃபேஸ்புக்கில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘வெளிநாட்டுப் பயணிகளுக்கு எல்லைகளை முழுமையாகத் திறப்பதற்கான நடவடிக்கைகளை சிங்கப்பூா் அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை சென்னை, தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூா் வரும் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இனி இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்து வருபவா்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அதேபோல் மலேசியாவின் பெனாங், கோலாலம்பூா், இந்தோனேசியாவின் ஜகாா்த்தா, பாலி, வியத்நாம், கிரீஸ் ஆகியவற்றில் இருந்து வருபவா்களும் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. வரும் 16-ஆம் தேதிமுதல் புதிய விதிகள் அமலுக்கு வரும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.