இந்தியா

மணிப்பூரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 67.77% வாக்குகள் பதிவு

மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 67.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

DIN

மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 67.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் முதல்கட்ட தோ்தல் பிப். 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இறுதிக்கட்ட தோ்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 67.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 22 தொகுதிகளில் நடைபெறும் இந்தத் தோ்தலில், மொத்தம் 8.38 லட்சம் போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். 
92 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவா் இபோபி சிங்கும் ஒருவா். இறுதிக்கட்ட தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் 17 போ் குற்றப் பின்னணி கொண்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani வார ராசிபலன்! | Oct 5 முதல் 11 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

சன்பிளவர்ஸ்... சான்யா மல்ஹோத்ரா!

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

கரூர் பலி: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT