இந்தியா

மணிப்பூரில் மாலை 5 மணி நிலவரப்படி 76.04% வாக்குகள் பதிவு

மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 76.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

DIN

மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 76.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் முதல்கட்ட தோ்தல் பிப். 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இறுதிக்கட்ட தோ்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 

மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 76.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 22 தொகுதிகளில் நடைபெறும் இந்தத் தோ்தலில், மொத்தம் 8.38 லட்சம் போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். 
92 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவா் இபோபி சிங்கும் ஒருவா். இறுதிக்கட்ட தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் 17 போ் குற்றப் பின்னணி கொண்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... ஆஷ்னா ஜவேரி!

பால் நிலா... ஹர்லின் தியோல்!

உலக அரங்கில் இந்திய சினிமா... ரன்வீர் சிங் பேச்சு!

தமிழ்நாட்டில் இதுவரை 6.07 கோடி படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

”RSS சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு வெளியே SIR-ஐ எதிர்த்து போராடும் Vijay" - Appavu

SCROLL FOR NEXT