முகப்பு
இந்தியா

விபத்தை தவிர்க்க ரயிலை கைகளால் தள்ளிய பயணிகள்...உத்தரப் பிரதேசத்தில் சுவாரஸ்யம்

தீ பரவாமல் தவிர்க்கும் வகையில் ரயில் பெட்டிகளை பயணிகள் கைகளால் தள்ளுவதை விடியோவில் காணலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
ரயிலை கைகளால் தள்ளிய பயணிகள்
பகிர்:

சஹரன்பூரிலிருந்து தில்லி செல்லும் பயணிகள் ரயில்
உத்தரப் பிரதேசம் தௌராலா ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, என்ஜினிலும் இரண்டு ரயில் பெட்டிகளிலும் தீ பிடித்து கொண்டது. 

இதையடுத்து, ரயிலின் என்ஜின் மற்றும் அந்த இரண்டு பெட்டிகழளிலிருந்து மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தவிர்க்க ரயிலை பயணிகள் கைகளால் தள்ளும் விடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதில், பயணிகளுடன் ரயில் நிலைய அலுவலர்கள் சேர்ந்து தீ பரவியுள்ள பெட்டிகளிலிருந்து மற்ற பெட்டிகளை தனியாக தள்ளுவதை காணலாம். 

பின்னர், தௌராலா ரயில் நிலையத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதன் காரணமாக, ரயில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. இதில், எந்த வித உயிரிழுப்பும் காயமும் ஏற்படவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். விபத்து ஏற்பட்டதன் காரணம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →