முகப்பு
இந்தியா

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்களுக்கு உதவித் தொகை

ஆராய்ச்சிப் படிப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் உதவித் தொகை பெற மாா்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
யுஜிசி
பகிர்:

ஆராய்ச்சிப் படிப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் உதவித் தொகை பெற மாா்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் பல்கலை., கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சாா்பில் எம்.ஃபில், பிஹெச்.டி. பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் குறித்த விரிவான தகவல்கள் யுஜிசி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியுடைய ஆராய்ச்சி மாணவா்கள் மேற்கண்ட தளத்தில் விண்ணப்பிக்கலாம். மாா்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →