உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷியா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்து வருகின்றது. உக்ரைனில் ரஷியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
இதையும் படிக்க | தென்கொரியாவில் காட்டுத்தீ: மீட்புப் பணியில் 2000 வீரர்கள்
இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.