இந்தியா

புணே மெட்ரோ ரயில் திட்டம்: பிரதமா் மோடி தொடக்கிவைத்தார்

புணே மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமா் மோடி இன்று தொடக்கிவைத்தார்.

DIN

புணே மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமா் மோடி இன்று தொடக்கிவைத்தார்.

பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மகாராஷ்டிர மாநிலத்துக்கு பிரதமா் மோடி இன்று சென்றுள்ளார். அப்போது, 32.2 கி.மீ. தூரம் கொண்ட புணே ரயில் திட்டத்தின் 12 கி.மீ. தொலைவுக்கான வழித்தடத்தை அவர் தொடங்கிவைத்தார். 

இத்திட்டம் மொத்தம் ரூ.11,400 கோடிக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கார்வார் மெட்ரோ ரயில் நிலையத்தை தொடங்கிவைத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், அங்கிருந்து ஆனந்த் நகா் மெட்ரோ ரயில் நிலையம் வரை பள்ளி மாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். 

இத்திட்டத்திற்கு 2016-இல் அவா் அடிக்கல் நாட்டியிருந்தாா். முன்னதாக புணே மாநகராட்சி வளாகத்தில் 1850 கிலோ எடையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலையையும் பிரதமா் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூங்காத விழிகள் இரண்டு... ஸ்ரீநந்தா சங்கர்!

சீரற்ற சீர்... மன்மீத் கௌர்!

தமிழ்நாட்டின் 35-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக 16 வயது இளம்பரிதி!

கோவாவில் குதூகலம்... ரஜிஷா விஜயன்!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT