இந்தியா

உக்ரைனிலிருந்து 185 இந்தியர்கள் மும்பை திரும்பினர்

போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 185 இந்தியர்களுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புடாபெஸ்டிலிருந்து இன்று அதிகாலை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. 

DIN

போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 185 இந்தியர்களுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புடாபெஸ்டிலிருந்து இன்று அதிகாலை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. 

IX-1202 விமானத்தில் அதிகபட்சமாகக் கேரளத்தைச் சேர்ந்த 143 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 25 பேரும் இருந்தனர். மேலும், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 5 பேர், ஹரியாணாவைச் சேர்ந்த 3 பேர், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலிருந்து தலா இரண்டு பேர், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் இருந்தனர். 

மும்பை விமான அதிகாரிகள் உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்கள் விமான தளத்தில் தங்கள் உடைமைகளுடன் விரைந்து வெளியேறுவதற்கும், கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

மேலும், பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் அந்தந்த மாநில மக்களின் உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவு போன்றவற்றைப் பொறுப்பேற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT