முகுல் ஆர்யா 
இந்தியா

பாலஸ்தீனம்: இந்திய தூதரகத்தில் தூதர் முகல் ஆர்யா சடலமாக மீட்பு

பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய தூதர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

DIN


பாலஸ்தீனம்: பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய தூதர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீனத்துக்கான இந்திய தூதர் முகுல் ஆர்யா, பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் கிடந்ததாகவும்,  இதுதொடர்பாக பாலஸ்தீனம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்திய தூதர் முகல் ஆர்யாவின் மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெய்சங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முகுல் ஆர்யாவின் மறைவு செய்தியை கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியடைந்ததாகவும், அவர் ஒரு திறமையாக அதிகாரியாக செயல்பட்டவர். அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது  இரங்கல். ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை அதிகாரிகள் செய்து வருவதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

2008 ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சேர்ந்த முகுல் ஆர்யா, ரஷியா, ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியவர். 

பாலஸ்தீனத்துக்கான இந்திய தூதர் முகுல் ஆர்யா தூதரகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT