புதுச்சேரியில் பூஜ்யமான ஒருநாள் கரோனா பாதிப்பு
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இன்று கரோனா பாதிப்பு பூஜ்யமாகப் பதிவாகியுள்ளன.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இன்று கரோனா பாதிப்பு பூஜ்யமாகப் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து இயக்குநர் ஜி.ஸ்ரீராமுலு வெளியிட்ட அறிக்கையில்,
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு மண்டலங்களிலும் மொத்தம் 157 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் கரோனா பாதிப்பு பூஜ்யமாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது கரோனா சிகிச்சையில் உள்ள 28 பேரில், மூன்று பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 25 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் குணமடைந்து வருகின்றனர்.
11 பேர் நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்தமாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,63,755 ஆக உள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா இறப்பு பதிவாகவில்லை. மொத்த உயிரிழப்பு 1,962 ஆக உள்ளது.
சுகாதாரத்துறை இதுவரை 22,20,570 மாதிரிகளைப் பரிசோதித்ததில் 18,65,362 மாதிரிகள் எதிர்மறையாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை இரண்டு தவணையாக மொத்தம் 15,96,951 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.