இந்தியா

மகளிர் தினத்தன்று ம.பி.யில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த பெண் காவலர்கள்

DIN

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்தியப் பிரதேசம் முழுவதும் போக்குவரத்து நிர்வாகத்தை ஆண் காவலர்களுடன் இணைந்து பெண் காவலர்கள் போக்குவரத்தைக் கையாளுவார்கள் என்று மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா திங்கள்கிழமை தெரிவித்தார். 

பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை அதிகரிப்பதுடன், ஆண்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்ற முடியும் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

நாளை மகளிர் தினம். மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையில் பணியாற்றும் எங்கள் மகள்கள் ஆண்களுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து நிர்வாகத்தைக் கையாளுவார்கள். 
மாநிலத்தில் நாளை முதல் புதிய தொடக்கம் என்றார் அமைச்சர். 

பெண்கள் தொடர்பான பிரச்னைகளை முன்னிலைப்படுத்த, குறிப்பாக பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT