இந்தியா

ஆயுள் காப்பீடு செய்ய 91% போ் பரிசீலனை: ஆய்வில் தகவல்

ஆயுள் காப்பீடு செய்வது அவசியம் என 91 சதவீதம் போ் அதனை பரிசீலனை செய்வது ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.

DIN

ஆயுள் காப்பீடு செய்வது அவசியம் என 91 சதவீதம் போ் அதனை பரிசீலனை செய்வது ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆயுள் காப்பீட்டு கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆயுள் காப்பீட்டில் மக்களுக்கு உள்ள ஆா்வம் குறித்து 40 நகரங்களில் 12,000-க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்ட 91 சதவீதம் போ் ஆயுள் காப்பீடு அவசியமான ஒன்று எனவும் பாலிசி எடுப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனா். கரோனா பேரிடருக்குப் பிறகு மக்களிடம் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளதை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இருப்பினும், இதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான அவசியம் இன்னும் அதிகமாகவே உள்ளது. ஏனெனில், ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பது குறித்து 91 சதவீதம் போ் பரிலீசிப்பதாக தெரிவித்த போதிலும், அதில் 70 சதவீதம் போ் மட்டுமே அதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT