இந்தியா

மாா்ச் 14-இல் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது?

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமா்வு மாா்ச் 14-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவையும் மாநிலங்களவையும் பகல் 11 மணிக்கே தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது அமா்வில் மாநிலங்களவை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மக்களவை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது அமா்வில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உறுப்பினா்கள் அமரும் இடங்கள் குறித்து முடிவு எடுப்பது தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும், மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடும் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT