உக்ரைனில் சிக்கிய 2,078 உ.பி. மாணவர்கள் பத்திரமாக மீட்பு: யோகி ஆதித்யநாத்
ரஷியா போர் பதற்றத்தினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து மொத்தம் 2,290 மாணவர்களில் 2,078 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இந்தியாஉக்ரைனில் சிக்கிய 2,078 உ.பி. மாணவர்கள் பத்திரமாக மீட்பு: யோகி ஆதித்யநாத்
ரஷியா போர் பதற்றத்தினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து மொத்தம் 2,290 மாணவர்களில் 2,078 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
ரஷியா போர் பதற்றத்தினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து மொத்தம் 2,290 மாணவர்களில் 2,078 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் உரையாடிய ஆதித்யநாத்,
உக்ரைனில் மத்திய ரஷிய ராணுவ நடவடிக்கை மூலம் மீட்புப் பணியை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
உ.பி.யில் இருந்து மொத்தம் 2,290 மாணவர்கள் உக்ரைனில் படித்து வந்தனர். அவர்களில் 2,078 பேர் பத்திரமாக அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மீதமுள்ள மாணவர்களும் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்று முதல்வர் கூறினார்.
மேலும், கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 74 மாணவர்களில் 70 பேர் உக்ரைனிலிருந்து திரும்பியதாகவும் அவர் கூறினார். மற்ற நால்வரை மீட்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள்.
இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்கள் வெளியேற்றப்பட்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பிரதமர் நான்கு மத்திய அமைச்சர்களை சிறப்புத் தூதர்களாக அனுப்பியுள்ளார் என்பது குறிப்டிபடத்தக்கது.