இந்தியா

நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை: மருத்துவ ஆணையம்

DIN

இளநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையரகம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு, பொதுப் பிரிவினருக்கு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 என்றும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டது.

ஆனால், நீட் தேர்வில் வயது உச்ச வரம்புக்கு எதிராக பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. பொதுப்பிரிவில் தேர்வு எழுதுவோருக்கு வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன. ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. 

நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்புக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

தற்போது நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையரகம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆண்டுதோறும் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு தேதி மற்றும் நேரம் தேசிய தேர்வு முகமையால் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT