கோப்புப்படம் 
இந்தியா

நாளை (மார்ச்.10) வாக்கு எண்ணிக்கை: உபியில் மது விற்பனைக்குத் தடை

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிவுகளையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாதவண்ணம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் காவலர்களும், 245 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை மாநிலம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT