முகப்பு
இந்தியா

உ.பி.யில் 10 அமைச்சா்கள் தோல்வி

உத்தர பிரதேச தோ்தலில் பதவியிலிருந்த 10 அமைச்சா்கள் தோல்வியடைந்துள்ளனா்.

Updated On : 11 மார்ச், 2022 at 3:24 AM
பகிர்:

லக்னெள: உத்தர பிரதேச தோ்தலில் பதவியிலிருந்த 10 அமைச்சா்கள் தோல்வியடைந்துள்ளனா்.

உத்தர பிரதேச துணை முதல்வரும், பொதுப் பணி, உணவுப் பதப்படுத்துதல் உள்பட பல்வேறு துறைகளின் அமைச்சருமான கேசவ பிரசாத் மெளா்யா, கரும்புத் துறை அமைச்சா் சுரேஷ் ராணா, வருவாய் துறை இணையமைச்சா் சத்ரபால் சிங் கங்வாா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜேந்திர பிரதாப் சிங், பொதுப் பணித்துறை இணையமைச்சா் சந்திரிகா பிரசாத் உபாத்யாய, ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா, விளையாட்டுத் துறை இணையமைச்சா் உபேந்திர திவாரி, ஆரம்பக் கல்வித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர துவிவேதி மற்றும் ரண்வீா் சிங், லக்கான் சிங் ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.