பஞ்சாப்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அட்டகாசமான வெற்றி 
இந்தியா

பஞ்சாப்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அட்டகாசமான வெற்றி

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மன், 50 ஆயிரம் வாக்குகளைவிடவும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

IANS

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மான், 50 ஆயிரம் வாக்குகளைவிடவும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மான், தான் போட்டியிட்ட துரி தொகுதியில், 58,206 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதோடு, பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வர் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் 59 இடங்களை வென்றால் ஆட்சி என்ற நிலையில், ஆம் ஆத்மி 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

தேர்தல் முடிவுகள் தெரியவரும் முன்பே, தனது வீட்டில் பெரிய அளவில் கொண்டாட்டங்களை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிய பக்வந்த் மன், பதவியேற்பு முதல் பல்வேறு விஷயங்களையும் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தான் ராஜ் பவனில் முதல்வராக பதவியேற்கப் போவதில்லை என்றும், பகத் சிங்கின் சொந்த ஊரில்தான் பதவியேற்றுக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிய வந்தபோதே, அவர் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவிட்டார்.

சங்ரூரில் உள்ள தனது இல்லத்தில் ஆட்களை வைத்து ஜிலேபி சுடும் வேலையைத் தொடங்கிவிட்டிருந்தார். பெரிய பெரிய பாத்திரங்களில் ஏராளமான ஜிலேபிகள் செய்ய நேற்றைய தினமே தயாராகிவிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி 3 மணி நிலவரப்படி, பஞ்சாப்பில் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

SCROLL FOR NEXT