கோப்புப்படம் 
இந்தியா

கட்சியை மறுசீரமைப்பது குறித்து யோசிக்க வேண்டும்: அபிஷேக் மனு சிங்வி கருத்து

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் பெரும்பான்மைக்கும் தேவையான அதிக இடங்களில் முன்னிலை வகித்துவருகின்றன.

DIN

கடந்த சில ஆண்டுகளாகவே, சட்டப்பேரவை, மக்களவை என பெரும்பான்மையான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து வருகிறது.

இதனிடையே, பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், கட்சியை மறுசீரமைப்பது குறித்து யோசிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் பெரும்பான்மைக்கும் தேவையான அதிக இடங்களில் முன்னிலை வகித்துவருகின்றன. பஞ்சாபை பொறுத்தவரை, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துவருகின்றனர்.

அதுமட்டுமின்றி, பஞ்சாபில் தங்களது வாக்கு சதவிகிதத்தில் 50 சதவிகிதத்தை காங்கிரஸ் இழந்துள்ளது. கோவாவில் காங்கிரஸ் வெற்றிபெறும் என கருதப்பட்டு வந்த நிலையில், பாஜக ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "ஐந்து மாநிலங்களிலும் நாங்கள் தோற்றால், கட்சியை மறுசீரமைப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்" என்றார்.

அமரிந்தர் சிங்கை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது குறித்து பேசிய அவர், "திடமான முடிவை எடுத்தோம். ஆனால், அது விரும்பத்தகாத முடிவாக இருக்கலாம்" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT