இந்தியா

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தோல்வி

DIN

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாட்டியாலா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். 

இரண்டு முறை பஞ்சாப் மாநில முதல்வராக பதவி வகித்த அமரீந்தர் சிங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித் பால் சிங் கோஹ்லியிடம் தோல்வியடைந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில், அமரீந்தர் சிங் 49 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து பேரவைத் தேர்தலை எதிர்கொண்டார்.

இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பட்டியாலா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்ட அமரீந்தர் சிங் காலை 9 மணி முதலே பின்னடைவை சந்தித்து வந்தார். இந்த நிலையில் அவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT