இந்தியா

கோவாவில் வாக்கு எண்ணிக்கை நிறைவு: பாஜக 20 இடங்களில் வெற்றி

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

DIN


கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்றது. பஞ்சாபில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கிறது.

கோவாவில் 40 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 11 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி பெற்றனர். மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 2 இடங்களிலும், கோவா முன்னணி கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின்படி, பாஜக 33.31 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 23.46 சதவிகித வாக்குகளும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 7.60 சதவிகித வாக்குகளும், ஆம் ஆத்மி 6.77 சதவிகித வாக்குகளும், திரிணமூல் காங்கிரஸ் 5.21 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

என்னருகில் நீ... ரிது வர்மா!

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

SCROLL FOR NEXT