‘எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை’: அசாதுதீன் ஓவைசி 
இந்தியா

‘எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை’: அசாதுதீன் ஓவைசி

கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை வெளியாகின. இவற்றில் பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக முன்னணியில் உள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, “உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கடுமையாக உழைத்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “உத்தரப்பிரதேச மக்கள் பாஜகவிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அவர்களின் முடிவிற்கு மதிப்பளிக்கிறேன். இந்தத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், எங்களுக்காக உழைத்த கட்சியினருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT