முகப்பு
இந்தியா

கோவாவில் நேர்மையான அரசியல் ஆரம்பம்: கேஜரிவால்

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 2 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் நேர்மையான அரசியல் தொடங்கியுள்ளதாக அக்கட்சித் தலைவர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 2 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் நேர்மையான அரசியல் தொடங்கியுள்ளதாக அக்கட்சித் தலைவர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

கோவாவில் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 12 இடங்களிலும் ஆளும் பாஜக 19 இடங்களில் முன்னிலை வகித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆம் ஆத்மி கட்சியும் 2 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் ’ கோவாவில் ஆம் ஆத்மி கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் வென்சி மற்றும்  குரூஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள். இது கோவாவில் நேர்மையான அரசியலின் ஆரம்பம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.