பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் இணையும் மம்தா பானர்ஜி 
இந்தியா

பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் இணையும் மம்தா பானர்ஜி

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் செயல்படுவது தொடர்பாக ஒப்பந்தம் அடிப்படையில் ஆலோசனை வழங்கி வருகிறார். முன்னதாக பாஜக, பஞ்சாப் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்காக அவர் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடாமல் தேர்தல் வியூக ஆலோசனைகளை மட்டும் மேற்கொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக முதல்வர் மம்தாவின் ஒப்புதல் இல்லாமல் கட்சியின் சமூக ஊடக தளத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஐபேக் குழு வெளியிட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சிக்கு தேர்தல் வியூகத்திற்காக பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் குழு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் இயக்கும் முதல் படம்: புரோமோ தேதி அறிவிப்பு!

ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

SCROLL FOR NEXT