இந்தியா

நவ்ஜோத் சிங் சித்து 6,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து தோல்வியுற்றார். 

DIN

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து தோல்வியுற்றார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது. முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர். 

அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 6,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜீவன் ஜோத் கௌர் வெற்றி பெற்றுள்ளார். 

சிரோமணி அகாலி தளம் கட்சியின் பிக்ரம் சிங் மஜிதியா 14,408 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் தான் போட்டியிட்ட சம்கௌர் சாஹிப் மற்றும் பதெளர்( Chamkaur Sahib and Bhadaur) ஆகிய 2 பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐ லவ் பிங்க்... ஷிவானி நாராயணன்!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை!

திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு துவக்கம்!

அண்ணாமலை - டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

எச்1பி சர்ச்சைக்கு இடையே சீனாவின் கே விசா அறிமுகம்! இளைஞர்களை ஈர்க்கும் சிறப்பம்சங்கள்!

SCROLL FOR NEXT