ராகுல் காந்தி 
இந்தியா

தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்: ராகுல் காந்தி உறுதி

பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது.

DIN

கடந்த சில ஆண்டுகளாகவே, சட்டப்பேரவை, மக்களவை என பெரும்பான்மையான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து வருகிறது.

இதனிடையே, பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இரட்டை இலக்கு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன். வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். 

அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT