இந்தியா

மகாராஷ்டிராவுக்காக பாஜக இன்னும் 2.5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: சரத் பவார்

DIN

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுவருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மியும் மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

குறிப்பாக, பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதற்கு நேர்மாறாக பிரதான எதிர்கட்சியான ஆம் ஆத்மி, 117 தொகுதிகளில் கிட்டத்தட்ட 90 இடங்களில் முன்னிலைவகித்துவருகிறது.

தில்லியில் மட்டுமே ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மிக்கு முதல்முறையாக பஞ்சாப் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் இடத்தை ஆம் ஆத்மி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் முடிவுகள் குறித்து பேசியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், "பஞ்சாப் மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். 

பஞ்சாப் விவசாயிகளின் இதயங்களில் பிரதமர் மோடிக்கு எதிரான கோபம் உள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக 2.5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT