இந்தியா

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி

உத்தரகண்ட் மாநிலம் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியைத் தழுவினார். 

DIN

உத்தரகண்ட் மாநிலம் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியைத் தழுவினார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், உத்தரகண்ட் மாநிலத்தில் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவான் காப்ரியிடம் 6,932 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். 

உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் உத்தரகண்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப் தவிர்த்து பாஜக வென்றுள்ள நான்கு மாநில முதல்வர்களில் புஷ்கர் சிங் தாமி மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுபிஐ சா்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

வீல்ஸ் இந்தியா வருவாய் 9% அதிகரிப்பு

தாயுமானவா் திட்டம்: சென்னையில் 4 நாள்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம்

நெல் கொள்முதல்: 1.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2,801 கோடி - அமைச்சா் சக்கரபாணி

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி

SCROLL FOR NEXT