இந்தியா

ஒடிசாவில் தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்: சேவை பாதிப்பு

DIN

புவனேஸ்வர்: ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பீஜா ரயில் நிலையம் அருகே இன்று சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது.

மேலும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது.

விசாகப்பட்டினம்-கிரண்டுல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை கோராபுட் ரயில் நிலையத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் கிராண்டுலில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT