முகப்பு
இந்தியா

கிராமப்புற வளர்ச்சி என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டும்: பிரதமர் மோடி

கிராமப்புற வளர்ச்சி என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

கிராமப்புற வளர்ச்சி என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாதில் இன்று (11.03.2022) நடைபெற்ற குஜராத் பஞ்சாயத்து மகா சம்மேளனத்தில் உரையாற்றினார். மாநிலம் முழுவதிலுமிருந்து வந்திருந்த  பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். குஜராத் மாநிலம் மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் பூமி. மகாத்மா காந்தி எப்போதும் கிராமப்புற வளர்ச்சி, கிராமங்களின் தற்சார்பு பற்றியே பேசி வந்தார். 

தற்போது நாம் சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில், ‘கிராமப்புற வளர்ச்சி‘ என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டும். பெருந்தொற்றுப் பாதிப்பை கட்டுப்பாடாகவும் மற்றும் சிறந்த முறையிலும் எதிர்கொண்டதில் குஜராத்தின் பஞ்சாயத்து மற்றும் கிராமங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. குஜராத்தில் ஆண் பிரதிநிதிகளைவிட, பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகள் அதிக அளவில் உள்ளனர். 

ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து விவாதிப்பதைவிட வேறு எதுவும் இந்திய ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றிவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →